2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கல்முனையில் 50 நாட்களில் 55 டெங்கு நோயாளர்கள்; ஒருவர் மரணம்

Super User   / 2013 பெப்ரவரி 19 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல் அஸீஸ்

கல்முனைப் பிரதேசத்தில் 2013 ஜனவரி தொடக்கம் இதுவரை 55 டெங்;கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக தெரிவித்துள்ளது.

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், கல்முனை மாநகர சபை, மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியன இணைந்து டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன.

இவர்களில் ஜனவரி மாதத்தில் 29 பேரும் பெப்ரவரி மாதத்தில் 26 பேரும் உள்ளடங்குகின்றனர். மேலும் இதில் கல்முனை, கல்முனைக்குடி பிரதேசத்தில் 24 நோயாளிகளும், மருதமுனை பிரதேசத்தில் 31 நோயாளிகளும் இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.றயீஸ் தெரிவித்தார்.

இதேவேளை இன்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் றயீஸ் தலைமையிலான குழுவினர் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதேவேளை, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நேற்று திங்கட்கிழமை வரை அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதியை சேர்ந்த 50 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர் என வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் கூறினார்.

இவர்களில் 13 பேர் தற்போது வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0

  • mmohideens Tuesday, 19 February 2013 10:44 AM

    மேயர் அவர்கட்கு;
    தங்களின் மேலான கவனத்திக்கு|
    தினம்தோறூம் களிவுகள் அகற்றூவது போல் சில மாதங்களூக்கு தொடராக நுளாம்புகளூக்கான மருந்து கலந்த புகை அடிக்க நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையாய் கேட்டுகொள்கிறோம்.
    இவ்விடயத்தை மேயரின் கவனத்திக்கு தமிழ் மிரர் கொண்டு செல்ல வேண்டும் என விரும்புகிறோம். நன்றி.

    Reply : 0       0

    nilam Tuesday, 19 February 2013 04:47 PM

    நுளாம்புகளுக்கான மருந்து கலந்த புகை அடிக்க மாநகர சபைதான் நிதி வழங்குகிறது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X