Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 மே 01 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
மன்னம்பிட்டி பாலத்தில் வான் கவிழ்ந்த சம்பவத்தில் மரணமான 6 பேரின் ஜனாஸாக்களும், நேற்று சனிக்கிழமை இரவு இஸாத் தொழுகையின் பின்னர் மருதமுனை பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டன.
கடந்த வெள்ளிக்கிழமை கடந்த வெள்ளிக்கிழமை மேற்படி விபத்தில் பலியானவர்களுக்கான ஜனாஸாத் தொழுகை மருதமுனை மசூர் மௌலான விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இதன்போது, பல நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நேற்றைய தினம் - மருதமுனைப் பிரதேசத்திலுள்ள அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருந்ததோடு, பிரதேசம் முழுவதும் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.
இதேவேளை, விபத்தில் உயிர் தப்பிய வைத்தியர் ஆசிக் - தற்போது மருதமுனையிலுள்ள அவரின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்:
மன்னம்பிட்டி ஆற்றில் வான் கவிழ்ந்தது: நால்வர் பலி; இருவரை காணவில்லை
மன்னம்பிட்டி ஆற்றில் வீழ்ந்து பலியான 6 பேரின் ஜனாஸா நல்லடக்கம் இன்றிரவு
4 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago
Ashan Sunday, 01 May 2011 05:58 PM
நண்பா ஜஹான் உனக்கும் உனது குடும்பத்தினருக்கும் , உனது மனைவிக்கும் சுவர்க்கம் கிடைக்க பலகோடி கண்ணீர் சிந்தளுடன் கேட்கும் இந்த துஆ அல்லா ஆமின் ஆகுவன் . நீ எதிலும் பிரபல்யத்தையே விரும்புவாய் அதேபோல் உன் ஜனஸாவும் உலகம் அறிந்து பச்சிளம் பாலகன் கூட கண்ணீர் சிந்து அளவுக்கு போய்விட்டது நண்பா, காத்திரு நாங்களும் ஒருநாள் உன்னுடன் வந்து சேருவோம் .
Reply : 0 0
CIDDEEQUE Monday, 02 May 2011 12:59 AM
இவர்களுடைய அமல்கள் மூலம் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சுவர்க்கம் கிடைத்து இங்கு எப்படி கணவன் மனைவியாக சந்தோசமாக வாழ்ந்தார்களோ! உங்கள் மனைவி 500 கூறலின் பெண்களுக்கு எஜமானியாக இருக்க, நீங்கள் எஜமானாக இருக்க அல்லாஹ் உங்களை பொருந்திக்கொள்வானாக! அனைத்து முஸ்லிம்களும் இவர்களுக்கு பிரார்த்திப்பதுக்கு கடமை பட்டுள்ளோம்.
Reply : 0 0
siraj siro from maligaikadu Monday, 02 May 2011 04:31 PM
இதில் மரணமானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை சொல்கின்றார் ... மரணித்தவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவர்க்கம் கிடைக்க வேண்டும் அல்லா ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
ஆமின்.
Reply : 0 0
nalan virumbi Monday, 02 May 2011 06:08 PM
இது எங்களுக்கான படிப்பினை. அவர்கள் முந்தி விட்டார்கள் நாம் காத்து கொண்டு இருக்கிறோம். இந்த பித்னா உலகில் இருந்து அவர்களுக்கு நிம்மதி கிடைத்து விட்டது. இந்த சம்பவத்தோடு மக்களுக்கு படிப்பினை வர வேண்டும்.அல்லா எனக்கும் உங்களுக்கும் நல்ல ஈமானை தந்து நல்ல அடியானாக வாழ தௌபீக் செய்ய வேண்டும்.
Reply : 0 0
Siyam-sainthamaruthu Monday, 02 May 2011 06:11 PM
Allah evargalathu paavangalai mannithu nirantharamana suwana vaalvai koduppanaga!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago