Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 17 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பள்ளிவீதியையும் 6ஆம் குறுக்கு வீதியையும் இணைக்கும் மதகு(கல்வெட்டு) சேதமடைந்துள்ளனதால், அந்த குறுக்கு வீதியில் வாழும் சுமார் 30 குடும்பங்களின் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
சுமார் ஒரு வருடகாலமாக சேதமடைந்துள்ள இந்த குறுக்கு வீதியின் மதகானது இங்கு வாழும் குடும்பங்களின் பிரதான போக்குவரத்துப் பாதையை இணைக்கக்கூடியதாக காணப்படுவதனாலும், மழைக்காலம் தொடங்கவுள்ளதனாலும் இதனை திருத்தித் தருவதற்கு மாநகரசபை முன்வர வேண்டுமென்று இங்கு வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகரசபையின் கல்முனைக்குடி பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பொறுப்பாகவுள்ள மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். நிஸாரிடம் கேட்டபோது, இவ்விடயம் தொடர்பில் எங்களுக்கு உத்தியோகபூர்வமாக இன்னும் வேண்டுகோள் விடுக்கப்படவில்லை. அங்கு வாழும் குடும்பத்தினர் ஒப்பமிட்டு எங்களுக்கு வேண்டுகோள் விடுப்பார்களானால், நாங்கள் சபை அமர்வில் சமர்ப்பிப்பதனூடாக அனுமதி பெற்று இந்த வேலையை உடன் செய்து கொடுக்க முடியுமெனக் குறிப்பிட்டார்.
47 minute ago
50 minute ago
1 hours ago
Kanaz Mohamed Monday, 22 November 2010 04:36 PM
கண்டிப்பாக தீர்க்கப்படவேண்டிய விடயம் செய்திகளை உடனுக்குடன் தருவதில் tamilmirror வெப் சிறந்து விளங்குகின்றது என்பதற்கு இது ஒரு சான்றாகும். யாரும் நினையாத ஒரு உண்மையை உலகறிய செய்தது தமிழ் மிரர்தான் தான். உன் பணி தொடர என் வாழ்த்துக்கள்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
50 minute ago
1 hours ago