Niroshini / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் 16 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளனவென, அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ், நேற்றுத் (05) தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“ அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய 32 கிராம சேவகர்கள் பிரிவுகளில், உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு, ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
"கிராம சேவகர் பிரிவுகளில் உட்கட்டுமான அபிவிருத்தி வேலைத் திட்டங்களை இனம்காண்பதற்கான பொதுமக்களுடனான கலந்துரையாடல், சம்பந்தப்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
"இந்த வேலைத்திட்டங்கள், பொது மக்களின் ஆலாசனைக்கமைவாகவும் பங்களிப்புடனும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
“ஒரு கிராம சேவகர் பிரிவில், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி 70 சதவீதமும் சுய தொழில் ஊக்குவிப்பு 30 சதவீதமுமாக அமைய வேண்டும்" எனவும், "இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு நேரடியாக பங்களிப்பு வழங்கும் பொருட்டு, சுய தொழில் ஊக்குவிப்பை முன்னுரிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது" எனவும் அவர் இதற்போது மேலும் குறிப்பிட்டார்.
58 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago