Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
'தீர்வு என்பது இலகுவாகவோ, விரைவாகவோ கிடைப்பதில்லை என்பதுடன், இந்த நாட்டிலுள்ள அனைத்துச் சமூகங்களுடனும் இணக்கப்பாட்டுடன் வாழ விரும்புகின்றோம்' என கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
'ஜனநாயக வழியில், இணக்கமான ரீதியில் புதிய நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்து தமிழ் மக்களுக்கான தீர்;வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக அமைதியான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இதைச் சாதமாகப் பயன்படுத்தி தங்கள் மீது அழுத்தமும் ஆதிக்கமும் வரும்போது, கை கட்டி மௌனியாக இருக்கமாட்டோம்' எனவும் அவர் கூறினார்.
ஆலையடிவேம்புப் பிரதேச இந்து மா மன்றத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட சைவசமயப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, இந்து மா மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'தமிழர்கள் இந்த நாட்டில் உரிமை பெற்ற, சமத்துவமான மக்களாக வாழ வேண்டும் என்று முயற்சித்தமைக்காக பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கினர். தமிழ் மக்கள் அரசியல் உரிமைக்காகவே போராடினார்கள். இந்த நாட்டில் ஏனைய இனங்கள் என்னென்ன உரிமைகளைப்; பெற்று வாழ்கின்றார்;களோ, அதே உரிமைகள் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜனநாயக ரீதியில் அவர்கள் போராடினார்கள். அது தோற்றுப்போகவே, ஆயுத ரீதியில் அவர்கள் போராடினார்கள்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 May 2025
17 May 2025