Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ்ப் பட்டதாரிகளின் உண்ணாவிரத போராட்டத்துக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தனது பூரண ஆதரவை நல்குவதுடன், இனிமேலும் எதிர்வரும் சந்ததிகளுக்கும் இவ்வாறான இன ரீதியான பேதம் காட்டப்படாது சகல தொழில் வாய்ப்புகளிலும் சம வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று இயக்கத்தின நிர்வாக செயலாளர் நித்தி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கல்வி, அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு போன்ற பலவிதங்களிலும் அன்று முதல் இன்று வரை பாதிக்கப்பட்டே வந்துள்ளனர். இதற்கு பிரதான காரணம் இனம் அடிப்படையில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவதேயாகும்.
நல்லாட்சி நடைபெறுகின்றது எனக் கூறிக் கொண்டு ஆட்சி நடைபெற்றாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படாமலேயே உள்ளன.
எனவே,இவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடச் சொல்லிக் கொச்சைப்படுத்தாமல் எழுத்து மூலமாக குறித்த காலப்பகுதிக்குள் அரச துறையில் நியமனம் வழங்கப்படும் என உறுதி அளித்த பின்னர் அவர்களின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
மேலும், இவர்களின் இந்த போராட்டத்துக்கு உறுதியான எழுத்து மூலமான பதில் கிடைக்கும் வரை இவர்களுடன் இணைந்து பலம் சேர்க்க பொது அமைப்புக்கள், ஆசிரியர் சங்கங்கள் முன்வர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .