2025 மே 03, சனிக்கிழமை

அறுகம்பைக்கு சுற்றுலா சென்ற சுமார் 40 பேர் உணவு ஒவ்வாமையால் பாதிப்பு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

இரத்தினபுரியிலிருந்து பொத்துவில், அறுகம்பைப் பிரதேசத்துக்குச் சுற்றுலா சென்ற சுமார் 40 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் சுகவீனம் அடைந்த நிலையில் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் இன்று (26) சிகிச்சை பெற்றதாக வைத்திய அதிகாரி பி.மோகனகாந்தன் தெரிவித்தார்;.

அறுகம்பையிலிருந்து திருக்கோவில் பிரதேசம் ஊடாக வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் இவர்களுக்கு திடீரென்று வயிற்று வலி, வயிற்றோட்டம், தலைச்சுற்று என்பன ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இவர்கள்  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் அவர் கூறினார்.

அறுகம்பைப் பிரதேசத்திலுள்ள உணவகங்களில் காலை உணவை உட்கொண்டதாகவும் இதன் பின்னர் குடிநீர் அருந்தியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X