2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'ஆசிரியர்கள் உலகை அழகுபடுத்துகின்ற சிற்பிகள்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

உலகை அறிவினால் அழகுபடுத்துகின்ற சிற்பிகள் தான் ஆசிரியர்கள்.இவ்வாறானவர்கள் சிறந்த ஆசிரியர்ளாக மிளிர வேண்டுமென்றால் அவர்கள் தினமும் கற்றுக் கொண்டு இருப்பவர்களாக மாறவேண்டும்.இதனால் தான் ஒரு சிறந்த ஆசிரியரை சிறந்த மாணவர் என ஒப்புவிக்கின்றனர் என்று திருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளர் ஆர்.சுகீர்தராஜன் தெரிவித்தார்.

திருக்கோவில் குமர வித்தியாலய பாடசாலையில் அதிபர் இ.இரத்தினகுமார் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வில் பிரதமஅதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஆசிரியர் தொழில் என்பது எமக்கு இறைவனால் அருளப்பட்ட பணி. இதனால் தான் இத் தொழிலை ஆசிரியர் சேவையென அழைக்கப்படுகின்றது.உலகின் அஞ்ஞான இருளைப் போக்கி ஞான ஒளியை உலகுக்கு காட்டுபவர்களாக இருக்கின்றார்கள்.

இதன் காரணமாக ஒவ்வொரு ஆசிரியரும் தினமும் புதிய,புதிய விடயங்களை தேடிக் கற்றுக் கொள்ள வேண்டும்.அப்போது தான் அறிவார்ந்த மாணவர்களை உருவாக்கி உலகை அறிவினால் அழகுபடுத்த முடியும் என்றார்.

மேலும்,ஆசிரியர் தொழிலை தொழிலாக கருதாது இறைவனுக்கு செய்யும் தொண்டாக நினைக்க வேண்டும்.ஒரு குழந்தைக்கு சிறந்த வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழவேண்டும்.

இதனால் தான் மாதா,பிதா, குரு தெய்வம் என வரிசைப்படுத்தி இறைவனுக்கு முதல் நிலையில் ஆசிரியர்கள் இந்த மண்ணுலகத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X