2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இறக்காமத்தில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக ரூ.120 மில்லியன் ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 18 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் இந்த வருடத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 120 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், இன்று (18) தெரிவித்தார்.

இறக்காமம் பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல், கொழும்பில் நேற்று (17) நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

இறக்காமம் -வரிப்பத்தாஞ்சேனை வரையான வீதியைக் கார்ப்பட் வீதியாகப் புனரமைப்பதற்கும் 50 மில்லியன் ரூபாயும் மைதானம் மற்றும் அதை அண்டியுள்ள குளத்தைப் புனரமைப்பதற்கு 20 மில்லியன் ரூபாயும்  வர்த்தகக் கட்டடத்தொகுதி உட்பட ஏனைய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 50 மில்லியன் ரூபாயும் செலவிடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .