2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இறக்காமத்தில் வீதிகள் புனரமைப்பு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.ரஹ்மத்துல்லா

அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வீதிகள் கொங்கிறீட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டம் நேற்று வியாழக்கிழமை மாலை தொடங்கப்பட்டுள்ளது.  

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் முயற்சியினால்  முன்னாள் இறக்கமம் பிரதேச சபை தவிசாளர் ஆர்.எம்.நயிஸர் தலைமையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வேலைத்திட்டத்தை  ஆரம்பித்து வைத்தார்.

இதற்கமைய வரிப்பத்தான்சேனை- 2ஆம் பிரிவின் 3ஆம் குறுக்கு வீதி மற்றும் மஜீட் வீதி ஆகியன புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X