2025 மே 02, வெள்ளிக்கிழமை

‘உரிமைக் குரலை நசுக்க முடியாது’

Niroshini   / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

“தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை கோரும் போராட்டத்தின் குரலாக உலகெங்கும் முழங்கிக் வரும் தமித் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அதன்  தலைமைகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுப்பதன் மூலம் அவர்களின் குரலை நசுக்கி தமிழ் மக்களின் உரிமையை வழங்காது தட்டிக்கழிக்க முடியாது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் டி.கலையரசன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை - திருக்கோவில் மண்டானை பாடசாலையில் வியாழக்கிழமை மாலை(10)இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“கூட்டமைப்பினர் உயிரைவிட தமிழ்களின் உரிமையையே மேலாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர். எமது  போராட்ட வரலாற்றில்  இலட்சக்கணக்கான உயிர்களையும் தலைமைகளையும்  இழந்துதான் இன்றும் எமது சுயநிர்ணய உரிமையை கோரி நிற்கின்றோம்.  தமிழர்களின் கண்ணீருக்கு ஒரு விடிவு கிடைக்கும்வரை நாம் எமது உயிரை துச்சமாக மதித்து போராடுவோம்.

தற்போது இடம்பெறும் உயிர் அச்சுறுத்தல் கபடநாடகத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் அஞ்சப் போவதில்லை. இவ்வாறு கதை கூறி தமிழ் மக்களையும் அதன் தலைமைகளையும் ஓரம்கட்ட முடியாது. தமிழ் மக்களின் நம்பிக்கையும் பலமும் எம்மோடு இருக்கின்றன” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X