2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'எமது மக்களுக்கு விடுதலையை த.தே.கூ. பெற்றுத்தரும்'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

'இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளியாக இருக்கின்ற காரணத்தினால்,  எதிர்வரும் வருடங்களில் எமது மக்களுக்கான விடுதலையை நிச்சயமாக கூட்டமைப்பு பெற்றுத்தரும்' இவ்வாறு  அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

சொறிக்கல்முனைக் கிராமத்திலுள்ள திருச்சிலுவை திருத்தல முன்றலில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு ஒளி விழா நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தினால் எமது மக்கள் பல தரப்பட்ட துன்பங்களையும் சந்தித்துள்ளனர். திட்டமிடப்பட்ட முறையில் ஒடுக்கப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த நிலங்கள் பறி போயுள்ளன. பல உயிரிழப்புகளை அவர்கள் சந்தித்துள்ளார்கள். இதனால் அம்மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது' என்றார்.  

எதிர்வரும் வருடங்களில்; எங்களுக்கான விடிவு, ஒளிமயமான வாழ்க்கை, எங்களை நாங்களே ஆளுகின்ற தன்னிச்சையான அதிகாரம் நிச்சயமாக கிடைக்கும்' என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X