2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

50 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்;.எம்.ஹனீபா

அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் பிரதேசத்தில் முதற்கட்டமாக 50 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள்; வழங்குவதற்கான அனுமதி கிழக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தால்  கிடைத்துள்ளதாக அப்பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இவர்களைத் தெரிவுசெய்வதற்கான காணிக் கச்சேரி நடைபெறுகின்றது. இந்நிலையில், நெற்செய்கைக்காணி ஒரு ஏக்கர் படியும் குடியிருப்புக்காணி 20 பேர்ச் படியும் மேட்டுநில பயிர்ச் செய்கைக்காணி 80 பேர்ச் படியும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசாங்க உத்தியோகஸ்தர்கள், மேலதிகமாக காணி உள்ளோர், கூடிய வருமானம் பெறுவோர்  ஆகியோருக்கு இக்காணி அனுமதிப்பத்திரங்கள் அனுமதி வழங்கப்படாதெனவும் அவர் கூறினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X