Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு,பைஷல் இஸ்மாயில்,ரீ.கே.றஹ்மத்துல்லா,எம்.சி.அன்சார்,பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.ஜி.ஏ.கபூர்,எஸ்.எம்.அறூஸ்
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்ட வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மிக விரைவில் தமது அமைச்சின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார போசாக்கு,சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைஷால் காசீம் உறுதியளித்துள்ளார்.
அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சின் உயர்மட்ட குழுவினர் நேற்று சனிக்கிழமை இரவு கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் கே.முருகானந்தனின் அழைப்பின் பேரில் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலைக்கு திடிர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இருந்தனர்.
இவ் விஜயத்தின் போது திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையின் தேவைகள் தொடர்பில் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி சு.இராஜேந்திரனுடன் கலந்தரையாடல்கள் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அந்தவகையில் வைத்தியசாலைக்கு தேவைப்படும் அவரச பொருள் கொள்வனவுக்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படவுள்ளதுடன் ஒட்சிசன் கருவி-01,இதய துடிப்பு பரிசோதனை கருவி-02, சலி உறுஞ்சும் கருவி, பாம்புக்கடி மற்றும் விஷம் அருந்தியர்களுக்கான மருந்துகள் என்பன வழங்குவதற்கும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அத்துடன்,நோயாளிகள் மற்றும் வைத்தியர்ளுக்கான இரண்டு மாடிகளைக் கொண்ட இரண்டு தந்குமிட விடுதிகள் அமைப்பதற்கான உத்தேச செலவு மதிப்பீட்டு அறிக்கையினை மிகவிரைவாக அனுப்பி வைக்கமாறும் அமைச்சரினால் கோரப்பட்டுள்ளது.
இவ்விஜயத்தில் பிரதியமைச்சர் பைஷால்காசீம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்தமஹிபால,கிழக்கு மாகாண சுகாதார சுகாதாரப் பணிப்பாளர் கே.முருகானந்தம்,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுடீன் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதேவேளை,பாலமுனை,மருதமனை, மாவட்ட வைத்தியசாலை மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை ஆகியவற்றின் அபிவிருத்தி தொடர்பாகவும் அதன் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் அவதானமொன்றினை மேற்கொள்வதற்காக, திடீர் விஜயமொன்றினை பிரதியமைச்சர் கௌரவ பைசால் காசீம் நேற்று மேற்கொண்டிருந்தமை குறிப்படத்தக்கது.
7 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago