2025 மே 03, சனிக்கிழமை

குளிரால் நோய்த் தாக்கம்; வைத்தியசாலைகளை நாடுமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 12 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

தற்போது நிலவும் கடும் குளிரான காலநிலை  காரணமாக அம்பாறையில் நோய்கள்; பரவி வருவதாக அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.அலாவுதீன், இன்று (12) தெரிவித்தார்.

காலை முதல் மாலைவரை கடும் குளிருடன் இணைந்து வெப்பமும் நிலவி வருவதால் பல்வேறு நோய்த் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.  

மூட்டுவலி, காய்ச்சல், தடிமன் போன்றவை பரவி வருவதாகவும் இவற்றுக்கான அறிகுறி தென்பட்டால், உடனடியாக வைத்தியசாலையை நாடி சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடும் குளிர் காரணமாக வயோதிபர்களும் சிறுவர்களுமே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X