2025 மே 17, சனிக்கிழமை

கல்முனையில் கடல் நீர் உட்புகுந்ததால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

அம்பாறை, கல்முனைக் கரையோரப் பகுதியை அண்டி அமைந்துள்ள வீடுகளுக்குள்; கடல் நீர் உட்புகுந்ததால், அங்குள்ள மக்கள் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேறி உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்த சம்பவம் இடம்பெற்றது.

வழமைபோன்று சனிக்கிழமை (10) நள்ளிரவு  கடலிலிருந்து பாரிய இரைச்சல் சத்தம் கேட்டது. இதனை அடுத்து, கடல் நீர் தங்களின் வீடுகள் இருக்கும் இடத்தை நோக்கி வருவதைக் கண்ட தாம்,  தங்களின் வீடுகளிலிருந்து வெளியேறியதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

கல்முனை மாமாங்கப்பிள்ளையார் கோவில், விஷ்ணு கோவிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு வெளியேறினர்.
 


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .