2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'சிறந்த திட்டமிடலிலேயே கிராமத்தின் வளர்ச்சி தங்கியுள்ளது'

Niroshini   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

ஒரு கிராமத்தின் வளர்ச்சி அக்கிராமத்தில் வாழும் துறை சார்ந்த அதிகாரிகளின் சிறந்த திட்டமிடலிலேயே தங்கியுள்ளதென தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் அச்சி.எம். இஸ்ஹாக் தெரிவித்தார்.

நிந்தவூர் கிராமத்தினரின் எதிர்கால அபிவிருத்திற்கும் முறையான திட்டமிடலுடன் கூடிய  பல்வேறு துறைகளின் முன்னேற்றங்களை துரிதப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூர் நலன்புரிச் சபையின் விசேட கலந்துரையாடல் இன்று (13) நிந்தவூர் அரசடித்தோட்டத்தில் நடைபெற்றது. இதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நிந்தவூர் நலன்புரிச் சபையின் தலைவரும், ஓய்வு பெற்ற மாகாணக் கல்விப் பணிப்பாளருமான எம்.எச். யாகூப் ஹசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அவர் தொடர்ந்த கருத்துத் தெரிவிக்கையில்,

எமது பிரதேசத்தில் அரசாங்கத்தினால் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்கொண்டு செல்லப்படவுள்ளது.

இதனை நாம் சிறந்த முறையில் திட்டமிட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளினூடாக கொண்டு செல்வதற்கு துறைசார்ந்தவர்களின் ஒத்துழைப்பையும் ஆலோசனையும் வழங்க வேண்டும்.

சமூகம் முன்னேற வேண்டுமானால் அச்சமூகத்தைச் சேர்ந்த கல்வியாளர்களினதும், துறை சார்ந்தவர்களினதும் ஒத்துழைப்பு இன்றியமையாததாக காணப்படுகின்றது.

எனவே, எதிர்காலத்தில் எமது கிராமத்தில் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் ஒரு முன்னோடியாக இவ் நலன்புரி சபை செய்யற்பட வேண்டும் என்றார்.


  Comments - 0

  • I.Abdul Jabbar Sunday, 14 February 2016 03:02 AM

    Masha Allah.Very good advice. Contribution of community is vital important.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X