2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'சிறந்த நாடாக இலங்கையை மாற்ற அனைவரும் முன்வர வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு சிறந்ததொரு  நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியிலுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள்  வழங்கும் நிகழ்வு, அம்பாறை டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த நாட்டிலுள்ள அனைத்துச் சமூகங்களினதும் கலாசாரம் பாதுகாக்கப்படும்.
மேலும், பௌத்த தர்மத்தை பாதுகாக்க சிறுவர்கள் உட்பட அனைவரும் முன்வர வேண்டும்' என்றார்.

அம்பாறை மாவட்டத்தில் தர்ம பாடசாலைகளை மேலும் அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சர் தயா கமகேயின் வேண்டுகோளுக்கமைய எதிர்காலத்தில் 50 அறநெறிப் பாடசாலைகளை அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X