2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

‘சிலையை அகற்றினால் பதவி துறப்பேன்’

Niroshini   / 2016 நவம்பர் 09 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இறக்காமம் -மாணிக்கமடு மாயக்கல்லிமலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையினை அகற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமானால், நான் அமைச்சுப் பதவியைத் தூக்கி வீசி விட்டு, வீடு செல்வேன் என ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே சூளுரைத்துள்ளார்.

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் கூட்டம், திங்கட்கிழமை (07) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“மாயக்கல்லிமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில், அதனைப் பூதாகாரப்படுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம். இந்த நாட்டில் சிலை வைப்பதை நிறுத்த வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது தவறாகும். 

இந்த நாட்டில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஒவ்வொரு நாளும் 100 முதல் 200 வரையில் புத்தர் சிலைகள் புதிதாக வைக்கப்படுகின்றன.

இதேவேளை முஸ்லிம், இந்து மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இந்த நாட்டில் பௌத்த மதத்துக்கு முதலிடம் வழங்குவதற்கு இணங்கியுள்ளனர்.

அதேபோன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும் இதனை ஏற்று அங்கிகரித்துள்ளார்கள்.

வரலாற்றினை எடுத்துப் பார்த்தால், தீகவாபி விகாரைக்குச் சொந்தமான 12 ஆயிரம் ஏக்கர் காணி, கல்முனை, பொத்துவில் பகுதிகளிலும் இருந்துள்ளது.

சிலை வைப்பதற்கு என்னிடம் எவர் உதவி கேட்டாலும் நான் தாராளமாக வழங்குவேன்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X