2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'சமுர்த்தித்திட்டம் வெற்றியடைய உத்தியோகஸ்தர்களின் செயற்பாடே காரணம்'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் சமுர்;த்தித் திட்டம் வெற்றி பெறுவதற்கு இங்குள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களின் சிறந்த செயற்பாடே காரணமென அப்பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.

திவிநெகும உதவி பெறும் 60 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத் தொழில்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களின் தன்னலமற்ற கடமைப் பொறுப்பு, உயரதிகாரிகளின் கட்டளைக்கு விரைந்து செயற்படுதல், பொதுமக்களின் பிரச்சினைகளை விரைவில் தீர்க்கும் செயற்பாடுகள் என்பன சிறந்த செயற்பாடாகக் காணப்பட்டன.

திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்திலும் அம்பாறை மாவட்டச் செயலக மட்டத்திலும் எமது உத்தியோகஸ்தர்கள் மற்றும் காரியாலயம் பற்றி நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளது.' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X