2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது பேரினவாத சிந்தனையாகும்'

Niroshini   / 2015 நவம்பர் 18 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அஸ்லம் மௌலானா

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிப்பதும் தேர்தல் முறையை மாற்றுவதும் சிறுபான்மை மக்களின் கருத்துக்களை உதாசீனம் செய்யும் பேரினவாத சிந்தனையாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் இன்று புதன்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
 
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை என்பது சிறுபான்மை மக்களுக்கு அதிகம் நன்மையளிப்பதாகும். இதில் சில குறைபாடுகள் இருந்தாலும், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முற்றாக நீக்காமல் ஒரு சில மாற்றங்களை மட்டும் கொண்டு வர வேண்டும் என்பதே உலமா கட்சியின் தொடர்ச்சியான கோரிக்கையாகும்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை மூலமே முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரப் ஐந்து வீத வெட்டுப்புள்ளியை பெற்றுத்தந்தார். அதேபோல், நிறைவேற்று ஜனாதிபதி முறை மூலமே 2010ஆம் ஆண்டு உலமா கட்சியினால் மௌலவி ஆசிரியர் நியமனத்தை பெற்றுத்தர முடிந்தது.
 
நிறைவேற்றதிகாரம் பிரதமருக்கு வழங்கப்படுமானால் அவரால் தற்றுணிவுடன் எந்த முடிவையும் எடுக்க முடியாது. மாறாக நாடாளுமன்றத்தில் விவாதித்தே முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இது சிறுபான்மை மக்கள் உரிமைகள் விடயத்தில் பாரிய இழுபறியை தோற்றுவிக்கும் என்பது கடந்த கால அனுபவங்களின் வெளிப்பாடாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், சிறுபான்மை கட்சிகளின் கோரிக்கைகளை அரசு உதாசீனப்படுத்தி விட்டு தேர்தல் முறையை மாற்ற முற்படுவது பேரினத்தை திருப்திப்படுத்தும் நோக்கிலேயாகும்.

தேர்தல் தொகுதி முறை என்பது மஹிந்த சிந்தனையின் படி கொண்டு வரப்பட்டதாகும். இதனை இந்த அரசு நடைமுறைப்படுத்துவதன் மூலம் மஹிந்த சிந்தனையை மைத்திரி, ரணில் அரசு தலையில் தூக்கி வைத்து நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாகவே தெரிகிறது.

இது மஹிந்தவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் பாரிய ஆதரவு தளத்தை உருவாக்கும் முயற்சியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .