Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
டெங்குக் காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டால், உடனடியாக அரசாங்க வைத்தியசாலைகளை நாடுமாறு கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர், டொக்டர் ஏ.எல்.எம்.அலாவுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் இன்று (15) டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிலையிலேயே அவர் இதனைக் கூறினார்.
இந்த வருடத்தின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கல்முனைப் பிராந்தியத்தில் சுமார் 600 பேர்; டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதுடன், 02 பேர் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
கடந்த ஒரு மாத காலப்பகுதியில் சாய்ந்தமருதில் நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த 16 பேருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததுடன், 96 பேர் சுகாதாரப் பணியகத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல், டெங்கு நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. ஆகையால், பொதுமக்கள் தங்களின் சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் நுளம்புகள் பெருகுவதைத் தடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
58 minute ago
3 hours ago
3 hours ago