Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 03 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
செய்திகளை முந்திக்கொண்டு வழங்க வேண்டும் என்பதற்காக உண்மையை தேடியறியாமல் பெறுமானம் அற்ற செய்திகளை வெளியிடுவதை இலத்திரனியல் ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். உண்மையைக் கண்டறிவதில் சற்று நேரத்தை ஒதுக்காமல் பொறுமையில்லாமல் வெளியிடப்படும் இவ்வாறான செய்திகளால் ஏற்படும் பாதிப்புக்கள், பாதிக்கப்படுகின்றவர் நிலை பற்றி சற்று சிந்தித்து செயலாற்ற வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று ரி.எப்.சி ஹோட்டல் மண்டபத்தில் வியாழக்கிழமை (01) இரவு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தலைமையில் நடைபெற்ற சுயாதீன இலத்திரனியல் ஊடக வலையமைப்பின் ஒன்று கூடல் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்
இலத்திரனியல் ஊடகங்களின் பெருக்கம் அபரிதமாக அதிகரித்துவருவகின்ற போதிலும் பொறுப்பு கூறல் என்பது விடுபட்டுச் செல்கின்றது. அவ்வாறு அதிகரிக்கும் ஊடகங்கள் நிலைக்க வேண்டுமானால் சுயாதீனம், பொறுப்புக் கூறல் என்பது கடைப்பிடிக்கப்படவேண்டும். அதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இக்கூட்டத்துக்கு வந்திருக்கின்றார் என்பதற்காக என்னைப் பற்றி விமர்ச்சிக்காமல் இருக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல.
ஆனால், அதற்கும் எல்லைகள் இருக்கின்றன. தேடல்கள் இல்லாமல் ஓர் அரசியல்வாதியை விமர்சித்து ஊதிப்பெருக்க வைப்பதற்காக எழுதப்படும் சில செய்திகள் அந்த சமூகத்தையே கேலிக்குள்ளாக்கும் என்பதை உணர வேண்டும். சிலர் தங்களது அந்தஸ்தை உயர்த்திக் காட்டுவதற்காக நாகரிகமற்ற கருத்துக்களை இலகுவாக தெரிவிக்கின்றனர். இவ்வாறு தெரிவிப்பது ஜீரணிக்க முடியாத மிகக் கடனமான விடயம் என்றார்.
அதேவேளை, இந்த நாட்டிலே நடந்த மிகப்பெரிய மோசமான அலுத்கம கலவரத்தை ஒரு சில விநாடிகளில் உலகறியச் செய்து சாதனை படைத்தது இலத்திரனியல் ஊடகம். இதனூடாக மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்ததும் அரசு பீதிக்குள்ளானதும் அவ்வரசு வீழ்வதற்கும் காரணமாக பிரதானமாக காரணமாக அமைந்ததும் இலத்திரனியல் ஊடகம் என்பதை யாவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். ஆகவே, சமூக நலனுக்காக உழைக்கும் இவ்வாறான ஊடக வலையமைப்பிற்கு தன்னால் முடிந்த உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
கடந்த இரு வாரங்களாகப் பிரதமருடன் குறித்த சில விடயங்களில் காரசாரமாக முரண்பட்டு வருகின்றேன். ஆனால், யாருக்கும் தெரியாது. எவ்வாறாயினும் பல விடயங்களில் தான் அமைதி காப்பதாகவும் அளவுக்கு மிஞ்சிய பிரசித்தம் அடைய வேண்டிய இலக்கை இல்லாமல் செய்துவிடும் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் கலந்துகொண்டு உரையாற்றியதுடன் , நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜ.எம். மன்சூர், இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
16 minute ago
27 minute ago
32 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
32 minute ago
33 minute ago