Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
உலகப் பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தலில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் கடந்த காலங்களை விட இவ்வருடம் முன்னேற்றமடைந்திருப்பதாகவும் எதிர்காலத்தில் ஆய்வாளர்களையும் விஞ்ஞானிகளையும் உருவாக்குவதில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் முனைப்புடன் செயற்பட்டுவருவதாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தெரிவித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 21 வருட நிறைவையொட்டி ஸ்தாபகர் தின நினைவு வைபவமும் மரநடுகை நிகழ்வும் நேற்றுத் திங்கட்கிழமை (24) பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தொடர்ந்து உரையாற்றுகையில், 'மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப், அரசியல் சாணக்கியத்துடன் தூரநோக்கோடு முன்னெடுத்த அரசியல் நகர்வுகளின் பயனாக இந்நாட்டிற்கு பொருளாதார ரீதியாகவும் அறிஞர்களை உருவாக்குவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம் சர்வதேச அந்தஸ்தில் காணப்படுகின்றதையிட்டு மகிழ்சி அடைகின்றேன்.
இலங்கையில் கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டி மூவின சமூகங்களும் பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் ஏற்படுத்தப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம் இன்று அவரது கனவை நனவாக்கியுள்ளதோடு நாட்டின் பொருளாதார, சமூக, கலாசார வளர்ச்சிக்கும் பங்களிப்பை வழங்கி வருகின்றது.
மேலும், இப்பல்கலைக்கழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று மர்ஹும் அஷ்ரபின் இலக்கை நாம் எல்லோரும் அடைவதற்கு பல்கலைக்கழகத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கும் எல்லா சமூகமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மர்ஹும் அஷ்ரபின் மூச்சும் பேச்சும் அவரது உணர்வுகளும் முஸ்லிம் சமூகமாகவே இருந்து வந்தது. அவரது அரசியல் கோட்பாடுகள், கொள்கைகள், இலக்குகளை வெற்றி கொள்வது எம்மீது இருக்கின்ற பாரிய சவாலாகும். அதற்காக அவரது தடத்தில் பயணிப்பதே இபபிராந்திய மக்களின் உயர்ந்த கௌரவமாக இருக்கும்' என்றார்.
மர்ஹும் அஷ்ரப் ஞாபகாhத்த உரையை பேராசிரியர் பி.ஏ. ஹூஸைன்மியா உரையை நிகழ்த்தினார். பேராசிரியர் பி.ஏ. ஹூஸைன்மியாவுக்கு உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.
24 minute ago
35 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
35 minute ago
47 minute ago