2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'தென்கிழக்கு பல்கலைக்கழகம் சர்வதேச ரீதியில் புகழ்பெற்று காணப்படுகிறது'

Niroshini   / 2015 நவம்பர் 18 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

உலகின் தொழில்நுட்ப மாற்றத்திற்கேற்ப இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் புதிய தொழில்நுட்ப வளர்ச்சி முன்னேறிவருவதாக பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் பீ.எம்.சீ. திலகரத்ன தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவப் பீடத்தின் ஏற்பாட்டில் 'வணிக, நிதி மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கம்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற 04ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு இன்று புதன்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது. இவ் வைபவத்தில் கலந்துகொண்டு உறையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவப் பீடாதிபதி கலாநிதி எஸ். குணபாலன் தலைமையில் நடைபெற்ற இவ்வாய்வு மாநாட்டில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு இன்றியமையாததாக காணப்படுகின்றது.

பல்கலைக்கழகங்களின் வளர்ச்சியில் குறுகிய காலத்துக்குள் தென் கிழக்கு பல்கலைக்கழகம் சர்வதேச ரீதியில் புகழ்பெற்று காணப்படுவதோடு தொழில்நுட்ப ரீதியிலும் பல்கலைக்கழகம் பரிணாம வளர்ச்சி கண்டுவருகிறது.

இப்பல்கலைக்கழகம் பல சர்வதேச, தேசிய ஆய்வரங்குகளை நடத்தி சர்வதேச ரீதியில் காலடி வைத்துள்ளது. அந்த வகையில் இவ்வாய்வரங்கை ஏற்பாடு செய்த பீடாதிபதிக்கும் அதன் நிருவாகத்தினருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன் என்றார்.

பீடாதிபதி கலாநிதி எஸ். குணபாலன், பிரதம பேச்சாளராகக் கலந்துகொண்ட பேராசிரியர் பீ.எம்.சீ. திலகரத்தினவுக்கு நினைவுப் பரிசில் வழங்கி கௌவித்தார்.

இந்நியா, மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களிலுள்ள ஆய்வாளர்களால் 69 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கலாநிதி எஸ். குணபாலன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .