2025 மே 21, புதன்கிழமை

துப்பாக்கியும் தோட்டாக்களும் மீட்பு;ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 மார்ச் 09 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டமடு வம்மியடி வயல் வெளியிலுள்ள குடிசையொன்றிலிருந்து சொட்கண் துப்பாக்கியொன்றையும் அவற்றுக்கான ஆறு தோட்டாக்களையும் இன்று புதன்கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டு குறித்த குடிசையிலிருந்து இவற்றை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில்  விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் 35 வயதுடைய ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .