Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜனவரி 24 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
நிந்தவூர் அரசடித் தோட்டத்தில் அமைந்துள்ள சுகாதார மத்திய நிலையத்தில் புதிய ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை செயற்படவுள்ள நிலையில், இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3 நடைபெறவுள்ளதாக அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலை அத்தியட்சகர், டொக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.
சுகாதாரப் பிரதியமைச்சர் பைஷால் காசீமின் அழைப்பின் பேரில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இவ்வைத்தியசாலையை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார்.
இதன்போது, 30 பாடசாலைகளுக்கும் 20 ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கும் 1,500 மருத்துவத் தாவரங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், அக்கரைப்பற்று –கல்முனைப் பிரதான வீதியை அண்டி நிர்;மாணிக்கப்படவுள்ள இவ்வைத்தியசாலையின் நிரந்தரக் கட்டட வேலைக்காக இவ்வருட வரவு -செலவுத்திட்டத்தில் 192 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனுடன் இணைந்ததாக ஒலுவில் அஷ்ரப் நகரில்; 20 ஏக்கரில் மூலிகைத் தோட்டம், மருத்துவப் பயிற்சி நிலையம், மருந்து உற்பத்தித் தொழிற்சாலை, ஓய்வு விடுதி என்பனவும் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
4 hours ago
8 hours ago