Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார்
நாட்டு மக்கள் அனைவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரதும் கரங்களைப் பலப்படுத்தி அவர்களின் ஜனநாயகப் பயணத்தில் இணைந்து செயற்படுவதோடு, தேசிய அரசாங்கத்தின் நல்லாட்சிப் பயணம் மேலும் ஐந்து வருடங்களுக்கு மேல் நீடிக்க அனைத்து மக்களும் ஆதர நல்கவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதியின் பிரதான அமைப்பாளருமான எம்.ஏ. ஹஸன் அலி தெரிவித்தார்.
சம்மாந்துறைத் தொகுதியில் எதிர்வருகின்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு எதிர்கொள்ளவது மற்றும் கட்சிக்கு புதிய அங்கத்தவர்களைச் சேர்த்துக்கொள்வது சம்பந்தமான கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்களுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் நேற்று(19) சம்மாந்துறை கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே, 'இலங்கையின் ஜனநாயக அரசியல் வரலாற்றில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக விரோத அரசியலில் மூழ்கிப் போயுள்ள எமது நாட்டில் முதன்முறையாக ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியும் புரிந்துணர்வுடனும், விட்டுக்கொடுப்புடனும் ஒன்றிணைந்து கூட்டு அரசாங்கமொன்றைத் தோற்றுவித்ததன் மூலம் அரசியல் சகவாழ்வை ஏற்படுத்தியுள்ளன. இதன் மூலம் இனம், மதம், மொழி கடந்து அனைத்து மக்களிடையேயும் சமாதான சகவாழ்வைக் கட்டியெழுப்புவதன் மூலம் செழிப்புமிக்கதான நாட்டைக் உருவாக்க முடியும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணைத் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் அதே சமயம், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பாரிய கடப்பாட்டையும் கொண்டுள்ளது.
நாட்டில் இன்று நல்லாட்சி அரசாங்கத்தினால் இனவாத, பிரிவினைவாத செயற்பாடுகளுக்கு அப்பால் சகல மக்களையும் ஒன்றிணைக்கும் நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சகல மக்களும் கொடுத்த ஆதரவும், பொதுத்தேர்தலில்போது பிரதான இரண்டு கட்சிகளுக்கும் கொடுத்த ஆதரவு இன்று நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்க சாதகமாக அமைந்துள்ளது' என்றார்.
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago