2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

நல்லாட்சியை உருவாக்கிய பங்கு 'மு.கா. வுக்கு உண்டென்பதை இந்த அரசாங்கம் மறந்துள்ளது'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 05 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கிய பாரிய பங்கு  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உண்டு என்பதை இந்த அரசாங்கம் மறந்து விட்டது என விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும் மு.கா. வின்; பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்தார்.

அடுத்த சில மாதங்களுக்குள் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இந்த அரசாங்கத்துக்கு பாடம் புகட்டவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அட்டாளைச்சேனையில் புதன்கிழமை (04) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'அம்பாறை மாவட்டத்தில் பிறந்த சாதாரண பொதுமகனுக்கும் அரசியலில் காய் நகர்த்தும் திறமை அதிகமாகவே காணப்படுகின்றது. இந்த சமார்த்தியத்தை அழகாக கற்றுத் தந்துள்ளார் எமது பெருந் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்.' என்றார்.

'கட்சியின் ஆணி வேராக அம்பாறை மாவட்ட மக்கள் உள்ளனர். ஆனால், குறிப்பிட்ட அதிகாரங்களோடு நாங்கள் செயற்படுகின்றோம்.

நாம் யாருக்காகவும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாகரிகமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் நடந்து கொள்கின்றோம்;' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .