Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜனவரி 29 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
பாரம்பரிய முறைகளைக் கைவிட்டு, நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய முறையில் ஆழ்கடல் மீன்பிடியை மேற்கொள்வதற்கு மீனவர்கள் முன்வர வேண்டும் என மீன்பிடி மற்றும் நீரகவளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
76 மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் சனிக்கிழமை (28) மாலை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'நவீன முறையிலான ஆழ்கடல் மீன்பிடிக்கான பயிற்சி மற்றும் சர்வதேசக் கடற்பரப்பில் மீன்பிடியை மேற்கொள்வதற்கு ஏதுவாக நீண்ட நாட்கள் கடலில் தங்கியிருந்து மீன்பிடியை மேற்கொள்ளக்கூடிய நவீன வசதியுடன் கூடிய இயந்திரப் படகுகள், தொலைத்தொடர்புச் சாதனங்களை மீனவர்களுக்கு மானிய முறையில் எமது அமைச்சு வழங்கவுள்ளது.
இலங்கையில் ஆழ்கடல் மீன்பிடிக்குச் சாதகமான வளங்கள் காணப்படுவதால், இத்தொழிலை அதிக வருமானம் ஈட்டும் தொழிலாக முன்னெடுப்பதற்கு நாம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு மீனவர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் விவசாயத்துறைக்கு அடுத்தபடியாக கடற்றொழில் துறையில் அதிக ஆர்வம் காட்டப்பட்டு வருகின்றது. இத்துறையை மேலும் வளர்ப்பதன்; மூலமாக நாட்டில் வருமானத்தை அதிகரிக்க முடியும்' என்றார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago