Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
'மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவின் கருத்து, அவருக்கு அரசியலில் பக்குவமில்லாத தன்மையை காட்டுகின்றது என்று கூறியுள்ள, நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபையை இதயசுத்தியுடன் பிரகடனப்படுத்திவிட்டு, மற்றவர்களின் உளசுத்தி பற்றி பேசியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன்' என்றும் கூறினார்.
'அவ்வாறில்லாமல் அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக அமைச்சர் பைசர், அவ்வாறானதொரு கருத்தை முன்வைத்துள்ளதென்பது கவலைக்குரிய விடயமாகும்' என்றும் கூறினார்.
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறவுள்ள இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா, தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் ஊடகவியலாளர் மாநாடு, ஞாயிற்றுக்கிழமை (30) சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்;பு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அண்மையில் சாய்ந்தமருதில் அமைச்சர் ரிசாட் பதியூதின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் பைசர் முஸ்தபா, சாய்ந்தமருது பிரதேசத்துக்கு உள்ளூராட்சி சபையொன்றை வழங்குவேன் என கூறினார். இதில் எந்தளவு உண்மைத் தன்மை உள்ளது' என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறுகையில்,
'பைசர் முஸ்தபா துறைசார்ந்த அமைச்சராவார். அவரின் கையில் சகல அதிகாரங்களும் இருக்கிறது. இதை அவர் செய்துவிட்டுவந்து பேசியிருந்தால் சந்தோசப்பட்டிருப்பேன். இது விடயாமாக எந்த நடவடிக்கையும் எடுக்காது, இங்கு வந்து என்னை வம்புக்கு இழுத்துவிட்டுச் சென்றிருப்பது அவரது பக்குவமில்லாத பண்பையே காட்டுகின்றது.
பைசர் முஸ்தபா ஓர் இளம் அமைச்சர். எனவே அவரது கூற்றை நான் பெரிதுபடுத்திக்கொள்ளவில்லை. அவரது தகப்பனாரிடத்தில் நான்; சட்டம் பயின்றவன், சட்ட உதவியாளராக அவரிடம் வேலை செய்தவன். பைசரின் குழந்தைப்பருவத்திலிருந்து கையைப்பிடித்து உல்லாசமாக ஓடித்திரிந்தவன். அரசியலுக்கு வந்ததால் இவை அனைத்தும் மறந்துவிட்டது போலும். இருந்தாலும் நான் இந்த விடயத்தில் அவரை புன்படுத்த விரும்பவில்லை' என்றார்.
பைசர் முஸ்தபாவின் செயலினால் நான் கவலைப் படுகின்றேனே தவிற, அவர் மீது கோபம் இல்லை. இனிவரும் காலங்களில் அவர் புரிந்து செயற்படுவாரென நான் நம்புகின்றேன்' என்றும் அவர் கூறினார்.
அண்மையில் சாய்ந்தமருதில் அமைச்சர் ரிசாட் பதியூதின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் பைசர் முஸ்தபா, 'சாய்ந்தமருது பிரதேசத்துக்கு உள்ளூராட்சி சபையொன்றை வழங்குவேன்' என கூறியமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவர்,
'இந்தப் பிரதேசத்துக்குத் தனியான உள்ளூராட்சி சபை ஒன்று வேண்டுமென, என்னிடம் வேறுசில அரசியல்வாதிகளும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்கள் இதய சுத்தியாக அந்தக் கோரிக்கையை விடுக்கவில்லை என்பதை நான் உணர்ந்துகொண்டேன். வெறுமனே புகைப்பட விளம்பரங்களுக்காகவே, அவர்கள் அவ்வாறான கோரிக்கையை விடுத்து உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை நான் அறிந்துகொண்டேன்.
ஆனால், அமைச்சர் ரிஷாட்டைப் பொறுத்தவரையில் உங்களின் பிரச்சினைகளை இனங்கண்டு, இதய சுத்தியோடு இந்த முயற்சியில் இறங்கினார் என்பதைப் பகிரங்கமாகக் கூறுகின்றேன்' என்றும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 May 2025
17 May 2025