Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
பொத்துவில் உப கல்வி வலயம் தனியான கல்வி வலயமாக செயற்படுவதற்கான அங்கிகாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் வேண்டுகோள் விடுத்தார்.
கிழக்கு மாகாணசபையின் வரவு -செலவுத்திட்டத்தில் கல்வியமைச்சுக்கான நிதியொதுக்கீட்டுக்கான விவாதம், மாகாணசபையில் திங்கட்கிழமை (21) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிருந்து பொத்துவில் உப கல்வி வலயமாக பிரிக்கப்பட்டு பெயரளவில் மட்டும் இந்த உப கல்வி வலயம் செயற்படுகின்றது. இதற்கான பௌதீகவளம் மற்றும் ஆளணியினர் வழங்கப்படவில்லை. இந்த உப வலயம் தனியான கல்வி வலயமாக செயற்படுவதற்கான அங்கிகாரம் வழங்கப்பட வேண்டும். இந்த உப வலயத்துக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டுமென இச்சபையில் தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.
'மேலும், தற்போது பொத்துவிலிலுள்ள சில பாடசாலைகளில் குறிப்பிட்ட காலத்துக்கு நிபந்தனை அடிப்படையில் கடமையாற்றும் 19 ஆசிரியர்கள் இவ்வருட முடிவில் அவர்களின் பழைய பாடசாலைகளுக்கு மாற்றம் பெறுவதற்கு முன், குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு பதிலீடுகள் வழங்கிய பின்னரே மாற்றம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறே, சம்மாந்துறைக் கல்வி வலயத்திலுள்ள இறக்காமம் கல்விக் கோட்டத்தில் கடமையாற்றும் 21 ஆசிரியர்களை இடமாற்றுவதற்கு முன் இப்பாடசாலைகளுக்கு பதிலீடுகளுக்கான ஆசிரியர்களை வழங்கிவிட்டே இடமாற்றம் வழங்கவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
19 minute ago
24 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago
1 hours ago
1 hours ago