Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 நவம்பர் 04 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் அரசாங்கத்தினால் புதிய வேலைத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி.வணிகசிங்க தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் வியாபார அபிவிருத்தி சேவை நிலையத்தினை ஸ்தாபிப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கருத்தரங்கு நேற்று வியாழக்கிழமை (03) ஒலுவில் கிரீன் விலாஸ் விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 'பிரதேச செயலகங்கள் ரீதியாக வியாபார முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பிரதேச செயலகங்களில் சேவை நிலையங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கத்தினால் திட்டம் வகுக்கப்பட்டு அவை தற்போது நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகங்களிலும் வியாபார அபிவிருத்தி சேவை நிலையங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென ஒவ்வொரு பிரதேச செயலகங்களில் இருந்தும் 03 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகின்றது.
இங்கு பயிற்சி பெற்றுள்ள நீங்கள் உங்கள் பிரதேசங்களிலுள்ள வியாபார அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். வியாபார முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக வேண்டி ஆலோசனைகள் தொழில் வழிகாட்டல்கள் மற்றும் கடன் வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.
வியாபார முயற்சியாளர்களை ஊக்குவிப்பதனால் பிரதேசத்துக்கு கூடிய வருவாயை பெறுவதோடு கூடுதலானோருக்கு வேலை வாய்ப்பினையும் வழங்க முடியும். இதனைக் கருத்திற் கொண்டே அரசாங்கம் இவ்வாறான வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
பொது மக்கள் குறிப்பாக வியாபார முயற்சியாளர்கள் தங்களது வியாபார நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு பிரதேச செயலகங்களுக்குச் சென்று ஆலாசனைகளையும், விழிகாட்டல்களையும் பெற்றுக் கொள்ள முடியும். அம்பாறை மாவட்டத்தில் விவசாயச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் வியாபாரத் துறையையும் அபிவிருத்தி செய்வதும் எமக்குள்ள பொறுப்பாகும்.
மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் சிற்நத வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு ஒவ்வொரு அரசாங்க உத்தியோகத்தர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அப்போதுதான் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 May 2025
17 May 2025