2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

“முக்கிய பிரச்சினையின் அறிக்கை ஐ.நா வுக்கு செல்லும்”

Gavitha   / 2017 பெப்ரவரி 05 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா

இலங்கையில் காணப்படும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் சிவில் அமைப்புக்கள், சமூக மட்டத் தலைவர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் கேட்டறிந்து,  அவற்றை ஆவணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கையை தேசிய மீனவ பேரவை மேற்கொண்டு வருவதாக சட்டதரணி சம்பத் புஷ்பகுமார தெரிவித்தார்.

தேசிய மீனவ பேரவையின் அனுசரணையுடன், அம்பாறை மாவட்ட மீனவ பேரவயினால் அம்பாறை மாவட்ட சிவில் அமைப்புக்கள், சமூக மட்டத் தலைவர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகளுக்காக  நடத்தப்பட்ட மேற்படி வியடம் தொடர்பான கலந்துரையடல் சனிக்கிழமை (04) மாலை அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கக் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதான வளவாளராக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டாவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

நான்கு வருடத்துக்கு ஒரு முறை, ஐ.நா. வின் உறுப்பு நாடுகளில் நிலவும் மனித உரிமைகளது நிலமை தொடர்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பூகோள கால மீளாய்வு அறிக்கை பெற்று வருகின்றது.

இதற்கமைவாக, 5,600 சொற்கள் அடங்கிய முக்கிய மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை, இலங்கையிலிருந்து எதிர்வரும் மார்ச் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

ஏனைய நாடகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் அனைத்து வளங்கள் காணப்படுகின்றன. இருந்த போதிலும் இனப் பிரச்சினை, அரசியல் செயற்பாடுகள் காரணமாக நாம் மிகவும் பின்தங்கி நிற்கின்றோம்.

அரசாங்கத்தின் சில செயற்பாடுகள், நடைமுறைகளுமே மனித உரிமை மீறள்களுக்கு பிரதான காரணமாக அமைகின்றன.  மக்கள் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதுடன் சிவில் சமூகங்கள் விழித்தெழுவதன் மூலமே நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியும்.

கடந்த முறை (2012 ஆம் ஆண்டு) சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம்,  இலங்கையின் மனித உரிமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் 162 விடயங்களில் கவனம் செலுத்து மாறு பணிக்கப்பட்டிருந்தும் அதில் 62 விடயங்களில் மாத்திரமே இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்படவிருக்கின்ற அறிக்கையில், சட்டத்தின் ஆட்சி, தடுத்து வைத்தல், சரணடைந்தவர்கள், சித்திரவதை, மனித உரிமை பாதுகாவலர்கள், கலாசார உரிமைகள், சமூக பொருளாதார உரிமைகள், மலையக மக்களின் பிரச்சினைகள், வெளிநாடுகளில் பணிபுரிவோர் பிரச்சினைகள் உள்ளிட்ட தலைப்புகளில் ஆராயப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .