2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 07 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கை, மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

இதன்போது, 200 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள், வாய்ப்பாடு அட்டைகள், அளவுகோல்கள், பேனா, பென்சில் உள்ளிட்  உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. சுமார் 40,000 ரூபாய் பெறுமதியில் இவை வழங்கப்படவுள்ளதாக கலைக்கூடல் மன்றத்தின் செயலாளர் எஸ்.எல்.றியாஸ் தெரிவித்தார்.

மன்றத்தின் தலைவரும் முஸ்லிம் சமய, கலாசார, தபால்த்துறை அமைச்சின் இணைப்பாளருமான அஸ்வான்  ஷக்காப்  மௌலானா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சாய்ந்தமருதுப் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.ரஸ்ஸாக், அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .