2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

முறியாண்டிப் பிரதேசத்தில் புதிய பாலம்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 02 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

அம்பாறை, சம்மாந்துறைப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முறியாண்டிப் பிரதேசத்தில் வீரமுனை -அம்பாலாந்துறை வீதியில் புதிய பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான வேலை செவ்வாய்;க்கிழமை (01) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பிரதேசமானது மழைக்காலத்தில் நீரில் மூழ்குவதால், பொதுமக்களும்; விவசாயிகளும் போக்குவரத்துச் செய்வதில் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். இது தொடர்பில் திகாமடுல்ல நாடாளுமன்;ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூரின் கவனத்துக்கு பொதுமக்கள் கொண்டுவந்தனர்.

இதனை அடுத்து, அவரின் முயற்சியால் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் 08 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில்; இப்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதன் நிர்மாண வேலை 06 மாதகாலத்துக்குள் பூர்த்தியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இப்பாலத்தை நிர்மாணிப்பதன் மூலம் சம்மாந்துறை, வீரமுனை, வீரச்சோலை, சொறிக்கல்முனை, நாவிதன்வெளி, சவளக்கடை, மத்தியமுகாம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த  விவசாயிகளும் பொதுமக்களும் நன்மை அடைவர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .