Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜனவரி 29 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
'முஸ்லிம்களின் அனைத்துப் பிரச்சினைகளும் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ளன. இவற்றுக்கான தீர்வை தற்போதைய அரசாங்கத்தில் பெற்றுக்;கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை இன்னும் நாம் இழக்காமலுள்ள போதிலும், இப்பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசம்வரை கொண்டுசெல்வதற்கும் தயங்க மாட்டோம்' என ஸ்ரீP லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அம்பாறையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சிறுபான்மையின மக்களின் காணிகளை மீட்டுத் தருமாறு கோரி அமைச்சரிடம்; காணி உரிமைக்கான அம்பாறை மாவட்டச் செயலணியின் தலைவர் பீ.கைறுதீன் மகஜர் கையளித்துள்ளதுடன், இது தொடர்பான கலந்துரையாடலும் நீர்வழங்கல்; அமைச்சின் அம்பாறை மாவட்டக் காரியாலயத்தில் இன்று (29) நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது, அம்பாறையில் காணப்படும் முக்கியமான 8 காணிப் பிரச்சினைகளும் அதன் மூலமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு, அவற்றுக்குரிய தீர்வுக்கான யோசனை என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
இக்காணிப் பிரச்சினைகள் காரணமாக சுமார் 1,200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை விடயங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்று மேற்படி செயலணியின் தலைவர் பீ.கைறுதீன் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிகமான காணிப் பிரச்சினை நெருக்கடி முஸ்லிம்களுக்கே ஏற்படவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் 39 சதவீதமாக வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு 8 சதவீதமான காணி மட்டுமே உள்ளது. ஆகவே, கிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சினைகள் முறையாகக் கையாளப்பட்டு தீர்வு காண்பதற்கு அனைவரும் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், 'இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பொறுப்பான உயர் அதிகாரிகளை ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதுடன், இப்பிரச்சினைகளில் பாதிப்புக்குள்ளானோரின் பிரதிநிதிகளைக் கொண்டு ஜனாதிபதியுடன் சந்திப்பை எதிர்வரும் 7ஆம் திகதி ஏற்படுத்தி தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
பொத்துவில், லாகுகல எல்லைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வேகாமம், கிரான்கோவை, கிரான்கோமாரி காணிப் பிரச்சினை, அட்டாளைச்சேனையில்; பொன்னன்வெளி, அஷ்ரப் நகர் காணிப் பிரச்சினை, ஆலையடிவேம்பில் கீத்துப்பத்து பாவாபுரம், அம்பலத்தாறு காணிப் பிரச்சினை, அக்கரைப்பற்றில் நுரைச்சோலைக் காணிப் பிரச்சினை ஆகியவை இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2025