Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 நவம்பர் 28 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகக் கிளம்பியுள்ள பூதங்களை அடக்குவது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன்; தாம் மிக இறுக்கமாகக் பேசி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் கூட்டிணைந்து செயற்படுவதற்காக ஜம்மியத்துல் உலமா, சூராசபை உட்பட புத்திஜீவிகளும் காத்திரமான பங்களிப்பை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழாவின் இறுதி நிகழ்வு, மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (27) இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு மேலும் உரையாற்றியபோது,'கடந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலும் இது போன்று புரளிகளும் பூதங்களும் கிளம்பியபோது, நான் அமைச்சராக இருந்துகொண்டே மிகத் துணிச்சலுடன் அப்பிரச்சினைகளை சர்வதேச சமூகத்திடம் கொண்டுசென்றேன்;. அது ஜெனீவாப் பிரேரணையில் மாற்றம் செய்யும் அளவுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது.
இப்போது முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு நாம் எதிர் நடவடிக்கைகளை செய்ய முற்படும்போது, அதனைச் சகித்துக்கொள்ள முடியாமல் மிகப்பெரும் பாய்ச்சல் எம்மீது நடக்கிறது. ஆகையால் இப்போதைய நிலைவரத்தில் தூரநோக்கு, பக்குவம், சாணக்கியம் போன்றவற்றுடன் தீர்வுகளைத் தேட வேண்டியுள்ளது' என்றார்.
'இதற்கு முன்னோடியாக எமக்குள் தெளிவான கலந்துரையாடலும் ஒற்றுமையும் அவசியமாகும். அதற்கான வழிகாட்டல்களை ஜம்மியத்துல் உலமா, சூராசபை உள்ளிட்ட சிவில் அமைப்புகளும் புத்திஜீவிகளும் மேற்கொண்டு வருகின்றனர். முஸ்லிம் அரசியல் தலைமைகளை ஒன்றிணைத்து செயற்பட வைப்பதற்காக அவர்கள் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அன்று அஷ்ரப் எனும் ஆளுமை மீது கொண்டிருந்த காழ்ப்புணர்வு காரணமாக அவரை ஒடுக்குவதற்கே முனைப்புக் காட்டப்பட்டது. இன்று முழுமையாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது நடத்தப்படுகின்ற பாய்ச்சலாக அது பரிணாம மாற்றம் பெறுகின்ற நிலைக்கு வந்துள்ளது. ஆகையால், கடந்தகாலப் படிப்பினைகளை வைத்து, தூரநோக்குச் சிந்தனையுடன் மிகப் பக்குவமாக பிரச்சினைகளை அணுக வேண்டியுள்ளது' என்றார்.
'சில தினங்களுக்கு முன்னர் ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் முஸ்லிம்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் கட்டுரை பிரசுரமாகியிருந்தது. அதனை மறுதலித்து நான் ஒரு கட்டுரையை தயார் செய்து கொண்டிருக்கின்றேன். ஏனெனில், இவ்வாறு பகிரங்கமாக பாரதூரமாக மிகவும் கேவலமாக எழுதுகின்ற கட்டுரையாளர்களுக்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டியுள்ளது.
'அண்மையில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பின்போது, முஸ்லிம்களுக்கு எதிரான இத்தகைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையானோம். இவற்றின் பின்னாலிருந்து செயற்படுத்தும் சக்திகள் யாது? அவற்றின் பின்புலம் என்ன? என்பவை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் மிகவும் விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தனர். அதன் மூலம் அக்குழுக்கள் யார் என்று இனங்காணப்பட்டுள்ளன. அப்போது நாமும் எமது கருத்துகளை வெளிப்படையாக எடுத்துரைத்தோம். ஆனால், எல்லாவற்றையும் வெளிப்படுத்த முடியாத சூழலும் இருக்கிறது. எவ்வாறாயினும், எழுத்து மூலமோ நாடாளுமன்றத்திலோ அவற்றைப் பதிவு செய்ய எண்ணியுள்ளேன்' எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
6 hours ago