Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா, பைஷால் இஸ்மாயில், றியாஸ் ஆதம், எஸ்.ஜமால்டீன்
இலங்கையில் முன்வைக்கப்படும் எந்தவொரு தீர்வுத் திட்டமாயினும், அதில் முஸ்லிம் சமூகம் பார்;வையாளர்களாக மாத்திரம் இருந்துவிடாது, பங்காளிகளாகவும் மாறவேண்டும் என தேசிய சமத்துவ ஒன்றியத்தின் தலைவர் வை.எல்எம்.யூசுப் தெரிவித்தார்.
இலங்கையில் முன்வைக்கப்படவுள்ள அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் சனிக்கிழமை (15) மாலை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இலங்கையில் பல்லினச் சமூகங்களுக்கு இடையிலான சமமற்ற வளப்பங்கீடு, பாராபட்சமான சட்ட அமுலாக்கம்;, அரசாங்கத்தின் அணுகுமுறைகள் என்பன காரணமாக எமது நாட்டில் சமூக நீதி மற்றும் தேசிய சமத்துவத்தை அடைவதில் சிறுபான்மையினச் சமூகங்கள் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றன.
நாட்டின் நல்லிணக்கச் செயற்பாடு மற்றும் நிலைத்து நிற்கக்கூடிய சமாதானத்துக்கான அடிப்படையாக தேசிய சமூகங்களுக்கு இடையிலான சமத்துவம் எய்தப்பட வேண்டியுள்ளது' என்றார்.
'தற்போது தயாரிக்கப்படும் யாப்பில் வடக்கு, கிழக்கு இணைப்பு, அதிகாரப்பகிர்வு, முஸ்லிம்களுக்கான நிலப் பற்றாக்குறைக்குத் தீர்வு இன்மை அல்லது நில உரிமைச் சமத்துவம் இன்மை, முஸ்லிம்களுக்கான தனியார் சட்டம் நீக்கப்படும் ஆபத்து போன்றவை முஸ்லிம் சமூகத்துக்கு உள்ள முக்கிய சவால்களாகும்.
இவை தொடர்பில் மக்களுக்குத் தெளிவூட்டி, அவர்களின் ஒற்றுமையுடன் இச்சவால்களை முறியடிக்க வேண்டிய அவசரத் தேவை எழுந்துள்ளது.
மேலும், இவை சம்பந்தமான விடயங்களில் அரசியல் தலைமைகள் பாராமுகமாக நடந்துகொள்வதும் கவலை அளிக்கின்றது. எனினும், எமது செயற்பாடு அவர்களைத் தூண்டி அவர்களின் போக்கு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதேயாகும்' எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 May 2025
17 May 2025