Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா, றியாஸ் ஆதம்
முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான இனவாதச்செயற்பாடுகள் தொடர்ந்த போதிலும், முஸ்லிம் சமூகம் அமைதியாக இருந்து பொறுமை காப்பதை சில இனவாதிகள் நமது சமூகத்தின் பலவீனம் என்று தவறாக எண்ணுகின்றனர் என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
நமது நாட்டின் வரலாற்றை நாம் பின்னோக்கிப் பார்க்கும்போது, முஸ்லிம் சமூகம் பேரினவாதிகளால் நசுக்கப்பட்ட வேளையிலும் ஆயுதப் போராட்டம் முஸ்லிம் சமூகத்தை நோக்கி திருப்பப்பட்ட வேளையிலும் முஸ்லிம் சமூகம் உயிர், உடமைகள் என பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டனர். அவ்வாறான சூழ்நிலையிலும் முஸ்லிம்கள்; பொறுமை காத்து நமது நாட்டின் சமத்துவம், சகோதரத்துவ நிலைமை பெறுவதற்கு அர்ப்பணிப்புடன் முன்மாதிரியாக செயற்பட்டனர் எனவும் அவர் கூறினர்.
ஒலுவில் பிரதேசத்தில் நேற்று (12) மாலை இடம்பெற்ற இளைஞர்கள் அமைப்பின் விசேட ஒன்றுகூடல்
நிகழ்வில் நேற்று (12) மாலை விசேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே
அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் 'நமது நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களின் 1ஃ3 பங்கினர் மாத்திரம் வட –
கிழக்கு மாகாணங்களில் செறிந்து வாழ்கின்றனர். 2ஃ3 பங்கினர் நாட்டின் ஏனைய மாகாணங்களில் சிங்கள மக்கள் மத்தியிலும் மலையக மக்கள் மத்தியிலும்
சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். எப்போதும் முஸ்லிம்கள் நமது நாட்டில் வாழும் சிங்கள மக்களுடனும் தமிழ் மக்களுடனும் சிநேகபூர்வமான முறையில் வாழ்ந்து வருகின்றனர்.
எப்படியாவது இலங்கையில் சிங்கள – முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் இன மோதல் ஒன்றை ஏற்படுத்த சில இனவாத சக்திகள் செயல்படுகின்றனர். இவ்வேளையில் முஸ்லிம் இளைஞர்கள் மிகவும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். முஸ்லிம் சமூகம் நமது நாட்டின் இறைமைக்கும் ஐக்கியத்துக்கும் சமாதானத்துக்கும் அளப்பரிய பங்கினை வகித்துள்ளது.
இருந்த போதிலும், அவைகளை எல்லாம் மறந்து சில இனவாதிகள் பகிரங்கமாகவே நமது சமூகத்துக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு நமது நாட்டில் இனவாதத்தை ஏற்படுத்துவர்கள் யாராக இருந்தாலும், சமமான முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபடும் சகலருக்கும் சட்டம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இனப்பிரச்சினைக்கான தீர்வு, சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை இத்தீர்வு திட்டத்தில் என்ன விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது என்பதனை அறிந்துகொள்ள முடியாத நிலையில் முஸ்லிம் சமூகம் உள்ளது.
நாளைய சமூகத்தின் தலைவர்களாகிய இளைஞர்கள்; நமது சமூகத்தின் சமகால அரசியல் நிலைமை தொடர்பாக தெளிவான தெளிவுகளைப் பெற்றுக்கொண்டு பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் இளைஞர்களின் செயற்பாடுகள் அமைய
வேண்டும்' என்றார்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025