2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'ரண்பிம' காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எஸ்.எம்.முஜாஹித்

கல்லோயா குடியேற்றத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் குடியேற்றப்பட்டு வாழ்ந்துவரும் 55 குடும்பங்களுக்கு, 'ரண்பிம' காணி உறுதிப்பத்திரம்  மற்றும் காணி உத்தரவு பத்திரம் என்பன நேற்று (29) பிரதேச செயலக கோட்போர் கூடத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் 'ரண்பிம' காணி உறுதிப்பத்திரம் 20 பேருக்கும் காணி உத்தரவு பத்திரம் 35 பேருக்கும் வழங்கப்பட்டன.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் எழுதிய பிரதேச செயலகத்தினுடாக பொது மக்கள் அரச சேவையை பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டி நூலும் வெளியீட்டு வைக்கப்பட்டது.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ.வணிகசிங்க, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், அம்பாறை மாவட்ட உதவி காணி ஆணையாளர் ஏ.எல்.ஐ.பாணு, அம்பாரை மாவட்ட உதவி  அரசாங்க அதிபர் விதார நாணயக்கார, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X