2025 மே 02, வெள்ளிக்கிழமை

‘வீட்டுப்பற்று இருந்தால் மட்டுமே நாட்டுப் பற்று வரும்’

Niroshini   / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

“நாட்டுப்பற்று என்பது, வீட்டிலிருந்து உருவாக வேண்டும். நாம் முதலில், நமது குடும்பத்தையும் நம்மைச் சூழவுள்ளவர்களையும் நேசிக்க வேண்டும். அப்போதுதான் நமது நாட்டையும் நேசிப்போம். ஆகவே, எதிர்கால சந்ததியினரை இளம் பராயத்திலிருந்தே வீட்டுப்பற்றுள்ளவர்களாவும் அதனூடாக நாட்டுப்பற்றுள்ளவர்களாக வளர்க்க வேண்டும்” என, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.

69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

“நமது தாய்நாட்டின் அபிவிருத்தியையும் அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் சுபீட்சமான நல்வாழ்வையும் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். அதற்காக அரச உத்தியோகத்தர்களாகிய நாம், அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதேவேளை, பொறுப்புமிக்க அரச பிரதிநிதிகள் என்பதையும் எப்போதும் மனதிற்கொண்டு சேவையாற்ற வேண்டும்.

"இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் நாட்டு மக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகளை, அவர்களிடம் கொண்டு சேர்க்கும் பாரிய பொறுப்பு, ஒவ்வோர் அரச உத்தியோகத்தருக்கும் இருக்கிறது.  இந்த நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதை, ஒவ்வோர் அரச உத்தியோகத்தரதும் தனது தலையாய கடமையாகக் கொண்டு செயலாற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X