Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 19 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
இலங்கை தெங்குப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று, பட்டியடிப்பிட்டி பிரதேசத்தில் தென்னைப் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் சுமார் 500 விவசாய குடும்பங்களுக்கான இரண்டாயிரம் தென்னங் கன்றுகள் இலவசமாக வழங்கி வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை(23) மாலை 4.00 மணிக்கு பட்டியடிப்பிட்டி தெங்குப் பயிர்ச் செய்கை அமைப்பின் காரியாலய வளாகத்தில் நடைபெறவுள்ளதாக அமைப்பின் தலைவரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எம்.அஸ்ஹர் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தெங்குப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் எஸ்.என்.சுசந்த பிரதம அதிதியாகவும் அக்கறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல்.சலாகுதீன், பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.றாஸி, தெங்குப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.திருமாறன், யு.எல்.ஜெஸ்மி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago