2025 மே 02, வெள்ளிக்கிழமை

'70 வயதுக்குட்பட்ட அங்கத்தவர்களுக்கு கடன்'

Niroshini   / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

முதியோர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் வகையில் 70 வயதுக்குட்பட்ட அங்கத்தவர்களுக்கு அரச வங்கிகளினூடாக 10 இலட்சம் ரூபாய் வரையிலான கடன் தற்போது வழங்கின்றது. அவ்வாறான கடன் வழங்கும் போது காப்புறுதியும் சேர்த்தே வழங்கப்படுவதாக பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன்  தெரிவித்தார்.

மேலும், இக்காப்புறுதியினூடாக கடன் பெற்றுக் கொண்டதன் பின்னர் குறித்த நபர் இறக்கும் பட்சத்தில் மீதமாக செலுத்தப்பட வேண்டிய கடன் தொகையினை காப்புறுதி நிறுவனம் வங்கிக்கு செலுத்தும் எனவும் மிகுதி தொகை இறந்தவரின் குடும்பத்துக்கு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதுபோன்ற பல சலுகைகளை தற்போதய அரசாங்கம் வழங்குவதாகவும் முதியவர்கள் மீது அதிக அக்கறையுடன் செயலாற்றுவதாகவும் அதனை முதியவர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முதியோர் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடலும் முதியோர் கௌரவிப்பு நிகழ்வும் மாவட்ட முதியோர் சங்க தலைவர் எஸ்.செல்லத்துரை தலைமையில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X