Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 நவம்பர் 22 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கோடிக்கணக்கான கடன் காரணமாக பாரிய வரிச்சுமை சுமத்தப்பட்டவர்களாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர் எனச் சுகாதாரப் பிரதியமைச்சர் பைஷால் காசீம் தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேச செயலகத்தின் திவிநெகும பிரிவினரின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களைக் கையளிக்கும் நடவடிக்கை நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் திங்கட்கிழமை (21) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'தேசிய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு -செலவுத்திட்டத்தில் நாம் உள்ளோம். இந்த வரவு -செலவுத்திட்டத்தில் கடந்த அரசாங்கம் பெற்ற கோடிக்கணக்கான கடனை மீளச் செலுத்தவேண்டிய நிலைமை தோன்றியதாலேயே, இந்த வரிச்சுமை எம்மீது சுமத்தப்பட்டு இந்த வரி; அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தில் திட்டமிடப்படாமல் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களின் காரணமாக அதற்கு மாதாந்தம் செலுத்த வேண்டிய நிதிக்கு போதியளவு நிதி வசதி இல்லாமல் உள்ளது. இருந்தபோதும், இந்த வரிச்சுமையானது எதிர்வரும் 2017ஆம் ஆண்டுடன் நீங்கிவிடும் என்றும் 2018ஆம் ஆண்டளவில் இந்த வரிச்சுமை குறைக்கப்பட்டு, நாட்டில் ஸ்திரமான பொருளாதார உட்கட்டமைப்புடன் பல வேலைத்திட்டங்கள் இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
7 hours ago