Super User / 2010 நவம்பர் 29 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சேனைக்குடியிருப்பு சேவா லங்கா நிறுவனத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 10 பேர் கௌரவிக்கப்பட்டனர்
கல்முனை திரு இருதநாதர் மண்டபத்தில் சேவா லங்கா நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கந்தையா சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்கா பிரதம அதிதியாகவும் மற்றும் சிரேஷ்ட தொழிற்பயிற்சி நிபுணர் ராமலிங்கம் சிவப்பிரகாசம் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம், நாவிதன்வெளி, திருக்கோவில், ஆலையடிவேம்பு, கல்முனை தமிழ் பிரிவு ஆகியவற்றின் பிரதேச செயளாலர்களான எம்.கோபாலரட்ணம், வ.அழகரத்தினம், வே.ஜெகதீசன், கே.லவநாதன், கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ஸ்ரீபன் மத்தியூ, சுகாதார வைத்திய அதிகாரி திருமதி ராஜேந்திரா, உதவிக்கல்விப் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான வி.கே.சகாதேவராசா, ஊடகவியலாளர் யூ.எம்.இஸ்ஹாக் ஆகியோர் பொன்னாடை போத்தி கௌரவிக்கப்படடனர்.
.jpg)
.jpg)
57 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
2 hours ago