Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 மே 01 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாழ்க்கைச் செலவுப்படியை அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்க ஆவன செய்வதுடன், நாளுக்கு நாள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக இடர் கஷ்டங்களுக்கு உள்ளாகியிருக்கும் சகல ஊழியர்களுக்கும் மாதாந்த வேதனத்தை 10,000 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் 17ஆவது மே தினக் கூட்டம் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் இன்று கல்முனை வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும், இனப்பிரச்சினை தீர்வுக்கு வடக்கு, கிழக்கு இணைந்த மாநில சுயாட்சி முறையை ஏற்படுத்த அரசு முன்வருவதுடன், இதன் மூலம் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கி தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவும் முன்வர வேண்டும். என்ற கோரிக்கை உட்பட அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் இணை நிறுவனமான வடக்கு கிழக்கு மாகாண ஜீவோதய நலன்புரி நிறுவனம் மற்றும் பொது ஊழியர் சங்கம் ஆகியன இணைந்து 35 மே தினக் கோரிக்கைகளாக அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ளன.
இதில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெத்தினம், எம்.எல். துல்கர் நயீம், கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் வசீர், உறுப்பினர் ஏ.அமிர்தலிங்கம், பேராசிரியர் ராஜேஸ்வரன், தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களும் கலந்து கொண்டார்கள்.
5 minute ago
59 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
59 minute ago
2 hours ago
2 hours ago