Editorial / 2020 ஜூலை 15 , பி.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

சகா
அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி தமிழ்க் கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி, இம்மாதம் 11ஆம் திகதி முதல் காணமல்போயுள்ளார்.
சிறுமி காணாமல்போனாரா அல்லது கடத்தப்பட்டாரா என்பது தெரியாமல், சிறுமியின் பாட்டி, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம், கிராம சேவை உத்தியோகத்தர், அட்டாளைச்சேனை பிரதேச செயலகம், கல்முனை சிறுவர் நன்னடத்தை அதிகாரி, கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு என்பனவற்றில் முறைப்பாடுகள் செய்துள்ளார்.
திராய்க்கேணியைச் சேர்ந்த மாமாங்கம் நாகம்மா என்பவரே இம்முறைப்பாட்டை வழங்கியுள்ளார். சிறுமிக்கு தாய், தந்தை இல்லாத காரணத்தால் பாட்டியே அவரை வளர்த்துவந்தார்.
தனது பேத்தியான சிவபாலன் யசுதா(வயது14) திராய்க்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 8இல் கல்வி கற்றுவருபவர் என்றும் இம்மாதம் 11ஆம் திகதி இரவு 10 மணியளவில் காணாமல்போயுள்ளார் என்றும் முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸில் மறுநாளே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இசதீன் லத்தீப் முறைப்பாட்டைப் பெற்றுக்கொண்டு, நடவடிக்கை எடுப்பதாக முறைப்பாட்டுப் பிரதியை வழங்கியுள்ளார்.
4 நாள்கள் கடந்தும் சிறுமி தொடர்பில் இதுவரை எதுவிதத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026