2025 மே 15, வியாழக்கிழமை

’18 நாள்களில் 52 வியாபாரிகள் சிக்கினர்’

Editorial   / 2020 செப்டெம்பர் 20 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்டத்தில், இம்மாதம் 01ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 52 வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களால், 02 இலட்சத்தி 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி என்.எம். சப்றாஸ், இன்று (20) தெரிவித்தார்.

மேலும், சில வர்த்தக நிலையங்களில் இருந்து மஞ்சள் தூள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதன் மாதிரிகளைப் பெற்றுக் கொள்வதற்கு, அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கைப்பற்றப்பட்டுள்ள மஞ்சள் தூளில் கலப்படம் செய்யப்பட்டதாக அறிக்கை கிடைக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, சப்றாஸ் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .