2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

19 நபர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல்

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருந்த 19 நபர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி எஸ்.அகிலன், இன்று (21) தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை ஆகிய பிரதேசங்களில் சுமார் 2,500 வீடுகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 220 நபர்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருந்த 19 நபர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டவர்கள், ஒரு வார காலத்துக்குள் சுற்றுப்புறச் சூழலை துப்பரவு செய்யுமாறும், அதனை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தினாலும், அதிகாரிகளினாலும் இவ்வாறான வேலைத் திட்டங்களை முன்கொண்டு செல்ல முடியாது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைத்தால் தான் டெங்கொழிப்பு நடவடிக்கையை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு இலகுவாக அமையுமெனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .